tamilnadu

img

6 பயங்கரவாதிகளில் 4 பேர் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் - காவல்துறை அதிகாரி தகவல்

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாராவில் புதன்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் நசீருதீன் லோன், அவரது கூட்டாளியுடன் கொல்லப்பட்டார். இரண்டு எல்.ஈ.டி பயங்கரவாதிகளிடமிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

4 நாட்களில் நடந்த3 தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களில் 4 பேர் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் என  தில்பாக் சிங் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பரமுல்லாவின் கிரேரியில் நடந்த துப்பாக்கி சூட்டில், வடக்கு காஷ்மீரின் உயர் லஷ்கர்-இ-தைபா (எல்இடி) தளபதி சஜ்ஜாத் ஹைதர், பாகிஸ்தான் பிரதிநிதி உஸ்மான் மற்றும் ஒரு உள்ளூர் கூட்டாளியான அனயத்துல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர். இரண்டு மூன்று குழுக்கள் வேலை செய்ய வந்துள்ளனர். சஜ்ஜாத்தின் பகுதியில்  மற்றொரு நண்பர் நசீருதீன் அல்லது அபு சாத், வடக்கு காஷ்மீரில் ஒரு குழுவைக் நடத்தி வந்துள்ளார்.

இராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தான் இந்த வெற்றி கிடைத்தது. சஜ்ஜாத் சுட்டுக் கொல்லப்பட்ட உடனேயே, நசீருதீன் அல்லது அபு சாத்திற்கு வடக்கு காஷ்மீரின் பொறுப்பை வழங்கியுள்ளனர். அவர்களுடன் டேனிஷ் என்றவரும் பணியாற்றியுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமை அமைப்பு கடந்த சில நாட்களாக கொல்லப்பட்ட தளபதிகளின் எண்ணிக்கையால் சிதைந்துவிட்டதாக ஜெனரல் (ஐ.ஜி) காவல்துறை அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஊடுருவல் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் குறைந்துவிட்டது, மேலும் பயங்கரவாத குழுக்களில் சேரும் உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கையிலும் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் பாதுகாப்புப் படையினரின் மற்றொரு பெரிய சாதனையை அவர் குறிப்பிட்டார், அதில் அவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகளை மீட்டு கொண்டு வர முடிந்தது.
2020 ஆம் ஆண்டில் இதுவரை, பயங்கரவாதிகளாக மாறிய 16 குழந்தைகளை நாங்கள் திரும்ப அழைத்து வந்து, அவர்களை மீண்டும் நல்ல வழியில் கொண்டுவருவதற்காக அவர்களது குடும்பத்தினரை சந்தித்துள்ளோம், என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

;